அடல்ஜியின் நண்பர்களுக்கு சிறப்பு
சமீபத்தில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் நமது முன்னாள் பிரதமாரான அடல் பிஹாரி வாஜ்பேய் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவினை வழங்கி சிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் ஹிம் உத்தராயணி என்ற அமைப்பு அடல்ஜியின் நண்பர்கள் குழாம் என்று பத்து பேரைத் தேர்வு செய்து மரியாதை செய்த்து. அதில் ஒருவராக பேராசிரியர் டாக்டர் ஹெச். பால சுப்ரமணியம் அவர்களும் கௌரவிக்கப் பட்டார். குறிப்பாக பத்து வருடங்களுக்கு முன்பு ஏராளமான கவி சம்மேளனங்களில் பால சுப்ரமணியம் அவர்கள் அளவளாவி இலக்கிய ரசனை ஊட்டியிருக்கிறார். அப்போது ஒரு தரம் அடல்ஜூயின் திருக்கரங்களால் லக்னௌ உத்தர் பிரதேஷ் ஹிந்தி சமஸ் தான் விருதினைப் பெற்ற சிறப்பு பால சுப்ரமணியம் அவர்களுக்கு உண்டு.
No comments:
Post a Comment