தாய்மொழி போற்றுதும் – பாரதியும் பாரதேந்துவும்
முனைவர் எச்.
பாலசுப்பிரமணியம்
சிலம்பை யாத்த இளங்கோ அடிகள் தெள்ளு தமிழில் பாடினார்:
ஞாயிறு போற்றுதும்!
ஞாயிறு போற்றுதும் !!
திங்களைப் போற்றுதும்! திங்களைப்
போற்றுதும்!!
மாமலை போற்றுதும்! மாமலை
போற்றுதும்!!
இரண்டாயிரம் ஆண்டுகள் சென்றபின் பாரத நாட்டில்
தாய்மொழிகளுக்கு நலிவு நேர்ந்தது. வடக்கிலிருந்து பாரதேந்துவும்
தென்னாட்டிலிருந்து பாரதியும் ஒரே குரலில்
பாடினார்கள்:
தாய்மொழி போற்றுதும்! தாய்மொழி
போற்றுதும்!!
ஆங்கில மோகத்தினால் தாய்மொழிக்கு நேர்ந்த நலிவினைக
கண்டு இருவரும் மனம் பதைபதைத்தனர்.
கோபுரத்தின் மீதேறி நின்று உரக்கக் கூவுவதுபோல, பாரதேந்து வித்யா நகரமான காசித்
தலத்திலிருந்து முழங்கினார்:
நிஜ
பாஷா உன்னதி அஹை ஸப் உன்னதி கோ மூல்
அனைத்து
உயர்வுகளுக்கும் ஆணிவேர்
தாய்மொழி
ஏற்றமே
தாய்த்திருநாட்டில் பாரதியார் பாப்பாவுக்கு இதோபதேசம்
செய்கிறார்:
(1)
தமிழ்த்திரு
நாடு தன்னைப் பெற்ற – எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி
பாப்பா! – நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
சொல்லில்
உயர்வு தமிழ்ச் சொல்லே; - அதைத்
தொழுது
படித்திடடி பாப்பா!
இன்றைக்குச் சரியாக நூறு வருடங்களுக்கு முன் தமிழநாட்டுப் பாப்பாவுக்கு
பாரதி போதித்த அமுத வரிகள்! இன்று எத்தனை
பெற்றோர் தம் குழந்தைகளுக்கு இந்த வரிகளை உள்ளபடியே போதித்துத் தமிழமுதம் பருகச்
செய்கிறார்கள்? மூன்று வயதிலிருந்தே
அல்லவா தம் பிஞ்சுகளை போட்டிச் சந்தையில் மாட்டி வதைக்கிறார்கள். பசுவைக்காட்டி ‘கௌ’ ‘கௌ’ என்று அதன் பிஞ்சுமண்டையில்
புகுத்துகிறார்கள். பெற்ற தாயை ‘மம்மி’யாக்குகிறார்கள்.
தாய்மொழியில் ஒரு அட்சரம் கூடப் பயிலாமல் பி.ஏ. பட்டம் பெறும் விந்தை இந்தப் பாரத
நாட்டில் மட்டும் தான் நிகழ்கிறது.
ஏன் பயில வேண்டும் தாய்மொழி? கணிதம், அறிவியல், சமூகவியல்
போன்ற பாடங்களை ஏன் தாய்மொழியில் பயிற்ற வேண்டும்? .
மொழியும் பண்பாடும் ஒன்றை விட்டொன்றைப் பிரிக்க முடியாதபடி
இணைந்துள்ளன என்கிறார் ராபர்ட் லாடோ ‘லிங்க்விஸ்டிக்ஸ் அக்ராஸ் கல்ச்சர்’ என்ற
தமது நூலில். அதாவது ஒரு மொழியைக்
கற்கும்போது அதன் கலாச்சாரமும் மாணவனின் உணர்வில் படிந்து விடுகிறது. எடுத்துக்
காட்டாக, தில்லியில் புகழ் வாய்ந்ததோர் பப்ளிக் ஸ்கூலில் மூன்றாவது வகுப்பில்
படிக்கும் தமிழ்ச் சிறுவனிடம் வள்ளுவர் பெயரைக் கூறியபோது ‘வள்ளுவரா? ...யார்
அவர்?’ என்று கேட்டான்.. பள்ளியில் நர்சரியிலிருந்தே
ஆங்கில மீடியம், போதாக்குறைக்கு பிரெஞ்சும் பயில்கிறான். அந்த நாட்டின் சூழல்,. பறவைகள், கவிஞர்கள் பெயர்கள் எல்லாம் தெரியும். அவ்வையார்-ஆத்திசூடி, வள்ளுவர்-குறள் பற்றி அறவே தெரியாது
அச்சிறுவனுக்கு. . இது தான் இன்றைய நிலை, இளைய தலைமுறை மீது நமக்குள்ள அக்கறை இது தான்.
மொழிகள் கற்பதில் தவறில்லை, பிற சமூகங்களின் பண்பாட்டைப
புரிந்து கொள்வதும் அவர்களுடன் கலந்துறவாடுவதும் நன்றே. ஆனால், தாய்ப்பாலுடன் பெற்ற
மொழியில் போதிய அறிவு பெறாமல்,
பிறமொழியில் பல கலைகள் பயின்றாலும் அவர் பல கற்றும் கற்றிலாரே என்கின்றனர்
பாரதியும் பாரதேந்துவும். . சிறுவயதிலேயே அந்நிய மொழியை முதல் மொழியாகவும் பயிற்று
மொழியாகவும் ஏற்றுக்கொள்வது தம் கால்களைத் தாமே கோடரியால் தறித்துக்
கொள்வதற்கொப்பாகும். அவ்வாறு தறிக்கப்பட்ட கால்கள் ஒருநாளும் தாய்மண்ணில் ஒட்டா. கல்விப்பயிற்சிகளை
முடித்தபின் அந்த மொழி பயிலும் நாடுகளுக்குத் தொண்டு புரிய ஓடிவிடும். நம்
நாட்டில் நிகழ்ந்து வரும் இந்த அவலக்கூத்தினை நாள்தோறும் கண்கூடாகப் பார்த்தும் அதே தவற்றைத் தவறாமல் செய்து வருகிறோம்.
தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை நம் மூத்த தலைவர்கள்
அறியாமல் இல்லை. மகாத்மா காந்தி, வினோபா,
ஜெ.சி.குமரப்பா, காமராஜர், அவினாசிலிங்கம் செட்டியார் போன்ற தலைவர்கள் இருபதாம்
நூற்றாண்டிலேயே வாழ்ந்து, இதற்கென இயன்றவரை முயன்று, மறைந்து போயினர்.
‘ஹரிஜன்’ (9.7.1938) இதழில் காந்தியடிகள் தம் அனுபவத்தைக் கூறுகிறார்: “பன்னிரண்டு
வயதில் நான் குஜராத்தி மொழியில் கணிதம், சரித்திரம், பூகோளப் பாடங்களை ஓரளவு
கற்றிருந்தேன். உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த முதல் மூன்று ஆண்டுகள் ஆங்கிலம் தவிர பிற பாடங்கள்
தாய்மொழியிலேயே கற்பிக்கப்பட்டன. பின்னர் ஆங்கில மீடியம் தொடங்கியதும்
கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்று தவித்தேன். ஜியாமிட்ரியை ஆங்கிலத்தில் கற்பித்தபோது தலை
சுற்றியது. ஆசிரியர்கள் ஆங்கிலத்தை எங்கள்
தலையில் புகுத்துவதிலேயே முனைப்பாக
இருந்தனர். நான்கு ஆண்டுகளில் ஆங்கில மீடியத்தில் நான் எந்த அளவு ஆல்ஜிப்ரா, ஜியாமிட்ரி, ஜாகரபி கற்றேனோ அதனை
குஜராத்தி மூலமாக ஒரே ஆண்டில் கற்றிருக்க முடியும். பிறகு அந்த அறிவை நாட்டு
மக்களின் சேவைக்குப் பயன்படுத்தவும் இயலும்.
தாய்மொழி வழியாக விஷயங்களைக் கிரகிப்பது எளிதாகவும் தெளிவாகவும் இருக்கும்.
குஜராத்தி மொழியில் என் ஆளுமையும் விருத்தி அடைந்திருக்கும். இது மட்டுமல்ல, என் ஆங்கில அறிவு எனக்கும் ஆங்கிலம் புரியாத என் குடும்பத்தினருக்கும் இடையில் தடை
ஏற்படுத்தியது. என் நடையுடை பாவனைகளில் மாற்றம் ஏற்பட்டது. இது எனக்கு மட்டும்
நேர்ந்த தனி அனுபவம் அல்ல.
பெரும்பாலானவர்களின் அனுபவம் இது தான்.”
‘யங் இண்டியா’ இதழில் காந்திஜி எழுதுகிறார் – ‘கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை
ஆங்கில மீடியத்தில் பயில்வதன் விளைவு பற்றி புனே நகரில் பேராசிரியர்களுடன்
பேசுகையில், அவர்கள் இதனால் ஒவ்வொரு மாணவனுடையவும் ஆறு ஆண்டுகள் வீணாகின்றன என்று
தெரிவித்தனர். பள்ளிகளின் எண்ணிக்கையை
ஆயிரமாயிரம் மாணவர் எண்ணிக்கையுடன்
பெருக்கி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் வீணாயின
என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.’(Speeches and Writings of Mahatma Gandhi, p. 318-320)
என்கிறார். உண்மை என்னவெனில் இவ்வாறு பிற மொழி மூலம் கற்கும் அறிவும் அரைகுறையானதே.
பாரதி தம்
‘சுயசரிதையில் கூறுவதும் இதுவே தான். :
கணிதம்
பன்னிரெண் டாண்டு பயில்வர், பின்
கார்கொள் வானிலோர் மீநிலை தேர்ந்திலார்;
அணிசெய்
காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி
ருக்கும் கவியுளம் காண்கிலார்,
இதோடு
நிற்கவில்லை. இதனால் விளையும் தீமையையும் எடுத்துரைக்கின்றார்: –
கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி
தாசன் கவிதை புனைந்ததும்,
(4)
உம்பர் வானத்துக கோளையும் மீனையும்
ஓர்ந்த
ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்
சேரன்
தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ
வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில்
நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார
ளித்துத தர்மம் வளர்த்ததும்
அன்ன
யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம்
பயில் பள்ளியுட் போகுநர் (பாரதியார், சுயசரிதை ).
என்றுரைக்கும் பாரதி தமது அனுபவக்கதையைச் உரைக்கின்றார் –
சூதும் வாதும் அறியாத தந்தை மகனின் நலம்
நாடி நெல்லை உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலக்கல்வி கற்க அனுப்ப, ஆங்கு பெற்ற துயரை
பாரதி மனக் குமுறி அறைகின்றார் –
பொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கி
நான்
மெய்யயர்ந்து
விழிகுழி வெய்திட
வீறிழந்தென துள்ளநொய் தாகிட
ஐயம் விஞ்சிச
சுதந்திர நீங்கி யென்
அறிவு
வாரித் துரும்பென் றலைந்ததால்
செலவு
தந்தைக்கோ ராயிரஞ் சென்றது
தீதெ
னக்குப் பல்லாயிரஞ் சேரந்தன
(5)
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப
தாயிர்ங் கோயிலிற் சொல்லுவேன். (பாரதியார், சுயசரிதை)
பாரதிக்கும் பாரதேந்துவுக்கும் இடையே வியத்தகு ஒற்றுமைகள்
உண்டு. இருவரும் தத்தம் மொழி இலக்கிய வரலாற்றில் நவீன யுகத்தின் முன்னோடிகளாக
விளங்கினர். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த
இருவரும் தாய்நாட்டையே பெற்ற தாயெனப் போற்றினர். தாய்மொழியை உயிரினும்
மேலாக நேசித்தனர். நடுவயதினை எட்டு முன்பே அமரராகி விட்ட பாரதியும் பாரதேந்துவும்
எந்தவொரு படைப்பாளியும் தம் முழு ஆயுளில்
செய்து முடிக்க இயலாத அளவுக்கு இலக்கிய
சாதனை புரிந்துள்ளனர். இவ்விருவர் வாழ்ந்த காலமும் சூழலும் மட்டுமே வேறுபடுகின்றன.
பாரதேந்து வாழ்ந்தது வெற்றி பெறாத முதல்
சுதந்திரப் போரைத் தொடர்ந்து பிரிட்டனின் நேரடி ஆட்சி துவங்கி, அடக்குமுறை உக்கிரமாக இருந்த
காலத்தில். . ஆங்கிலம் கற்ற மேல்தட்டு மக்கள் நடை உடை பாவனைகளில் ஆங்கிலேயரைப்
போலவே செயல்பட்டு ஏழை எளிய மக்களை அடக்குவதில் அரசுக்கு ஒத்தாசையாக இருந்தனர்.
பத்திரிகை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்தகைய சூழலில் பாரதேந்து
தனியொருவராகவே மக்கள் மனத்தில் தேசிய உணர்வினையும் தாய்மொழிப் பற்றையும் வளர்க்கப் பாடுபட்டார்.
ஆங்கிலேயரைப் புகழ்வது போலவே தொடங்கி மறைமுகமாகத் தாக்க வேண்டிய நிலை. இதற்காக
அவர் நாடகங்களைப் பயன்படுத்தினார்.
அங்கரேஜ் ராஜ்
ஸுக ஸாஜ ஸஜே ஸப் பாரீ
ஆங்கில ஆட்சியில் நாம் சகலவித சுகங்களும் பெற்று வாழ்கிறோம்
என்று கூறி அடுத்த அடியிலே வேதனை தொனிக்கப் பாடுகிறார் -
பை தன்
விதேஷ் சலி ஜாத் இஹை அதி க்வாரீ
ஆனால் நம் செல்வமெல்லாம் அயல்நாடு செல்கிறதே இதுவே பெரும்
கவலை என்கிறார்.
நாட்டின் நலிவுகளுக்கெல்லாம் மூல காரணம் தாய்மொழி அறிவு
இன்மையே என்பதை நன்குணர்ந்த பாரதேந்து அடிமை மோகத்தில் மயங்கிக் கிடக்கும் மக்களை
எழுப்புகிறார்:
நிஜ பாஷா
உன்னதி அஹை ஸப் உன்னதி கோ மூல்
அனைத்து
உயர்வுகளின் ஆணிவேர் தாய்மொழி ஏற்றமே
அங்க்ரேஜீ
படி கே ஜதபி ஸப் குன் ஹோத் ப்ரவீன்
பை நிஜ
பாஷா ஞான் பின் ரஹத் ஹீன் கே ஹீன்
ஆங்கிலம்
பயின்று மேன்மை பல பெற்றிடினும்
சொந்த
மொழி கல்லாதார் ஈனரினும்
ஈனரே
படோ லிககோ
கோஉ லாக் வித பாஷா பஹுத் ப்ரகார்
பை ஜப ஹீ
கச்சு ஸோச்சிஹோ நிஜ பாஷா அனுஸார்
பயிலுங்கள்
பல்மொழிகள் வித விதமாய்
எனின்
சிந்தியுங்கள் சொந்த
மொழியில் மட்டுமே
லகஹு ந அங்க்ரேஜ் கரோ உன்னதி பாஷா மாஹி
ஸப் வித்யா
கே க்ரந்த் அங்க்ரேஜின் மாஹி லகாஹி
காணீர்
வெள்ளையரை ஏற்றம் பெறுவீர் சொந்த மொழியில்
கொணர்நதனர்
அவர் தம்மொழியில் சகல அறிவுச்செல்வம்
உண்மை தான். உலகில் எந்த மொழியிலும் ஒரு நல்ல நூல்
வெளிவந்தால் ஒரே மாதத்தில் எளிய மொழிநடையில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு தயாராகி
விடுகிறது. எனவே தான் பாரதேந்துவும் பாரதியும் ஒரே குரலில் பேசுகிறார்கள்:
விவித
கலா சிக்ஷா அமித் ஞான் அனேக் ப்ரகார்
ஸப் தேஸன்
சே லை கரஹு பாஷா மாஹி ப்ரசார்
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
இதை இன்னும் விளக்கமாகக்
கூறுகிறார் பாரதி -
பிறநாட்டு
நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்
மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
தாய்மொழி வளர்ப்பில் பாரதியின் பங்களிப்பு கணிசமானது. நிறுவனமாகச் செய்ய வேண்டிய பணியை பாரதி தனியொரு
மனிதராகவே செய்தார். ‘வாழிய செந்தமிழ்’
என்று பாடியதோடு நில்லாமல், செந்தமிழ் செழித்து ஓங்கி மக்கள் நாவில் தவழவும் தாமே வழிகாட்டியாக நின்றார்.‘இயன்றவரை
தமிழே பேசுவேன்; தமிழே எழுதுவேன்; சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்” என்று உறுதிமொழி
எடுத்துக் கொண்ட பாரதி வாழ்நாள் முழுதும் அதன்படியே ஒழுகினார்.
‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!’ என்று
பாடிய பாரதி நமக்கு தாய்மொழியின் ஆற்றலை எடுத்துரைக்கிறார். ‘வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி’ என்கிறார். இன்றும்
வானம் அளந்ததனைத்தையும் அறிந்து அது மேன்மேலும் வளர வேண்டுமானால் தமிழர்கள் அதனை அனைத்துத்
துறையிலும் பயன்படுத்த வேண்டும்.
பாரதி யார் என்று பாரதிதாசன் தெரிவிக்கிறார் - “பாரதி செந்தமிழ்த் தேனீ - சிந்துக்குத்
தந்தை – கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு – மண்டும் மதங்கள் அண்டா
நெருப்பவன் – சாதிப் படைக்கு மருந்து – தமிழைச் செழிக்கச் செய்தான், தமிழால் தகுதி
பெற்றான்.” நாமும் தமிழைச்செழிக்கச்
செய்வோம்! தமிழால் தகுதி பெறுவோம்!!
No comments:
Post a Comment