மேற்கு மலைத் தொடரின் மடிதனில் அகத்தியரின் பொதிகையின் இதமான அரவணைப்பில் அமுதத் தமிழோடு ஆழ்வார் குறிச்சியினை பூர்விகமாக கொண்டவன். தேசிய மொழியான இந்தியின் மூலம் இந்தியாவை ஒருங்கிணைக்க எண்ணினார் மகாத்மா காந்தி. அத்தகைய முயற்சியில் காந்தி இந்தியை கற்றுக் கொள்ள அடிமை இந்தியாவின் அனைத்து மக்களிடமும் வேண்டுதல் செய்தார். காந்தியின் மீது கொண்ட அளப்பரிய அன்பின் காரணமாக இந்தியை கற்றுக் கொண்டேன்.. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான உயிர்த் தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழ் இலக்கியங்களை இந்தியில் மொழி பெயர்க்க தொடங்கினேன்…
காலம் மொழியோடு என்னையும் வளர்த்தது… தற்போது
நான் மட்டுமல்லாது என் சகோதரர்கள் ஹெச். பரமேஸ்வரன், ஹெச். பத்மனாபன், மற்றும் சகோதரி
அலமேலு கிருஷ்ணன் உட்பட என் குடும்பமே இந்தி, சமஸ்கிருதம் தமிழ், மலயாளம் என மொழி பெயர்ப்புகள்
மூலமாக இந்திய இலக்கியத்திற்கு இன்னும் வளமூட்டிக் கொண்டிருக்கிறோம். எங்களையும் எம்
மொழியையும் இந்தியப் பண்பாட்டையும் இந்தியச் சமுதாயத்தையும் மிகுந்த ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு
இதையே எங்களின் பங்களிப்பாக நம்புகிறோம். இந்த சித்திரைத் தமிழ் புத்தாண்டில் வலைப்பூ
வழியாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் எனது உளங் கனிந்த
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்…
மிக்க அன்புடன்
முனைவர் ஹெச்.பாலசுப்ரமணியம்
No comments:
Post a Comment